மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்புமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைக் கல் மலைப் பகுதியில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

வேப்பவெட்டுவான் வீதி இலுப்பையடிச்சேனையைச் சேர்ந்த 41 வயதுடைய கீர்த்திகுமார் என்பவே உயிரிழந்தவராவர்.

மாடு மேய்க்கச் சென்று விட்டு, தனது நண்பருடன் வீடு திரும்பிய போதே யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் நண்பர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நஸீர் சடலத்தைப் பார்வையிட்டதோடு, கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை