பிரிகேடியர் சு. ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நாள்



சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 02 ஆம் திகதி காலை 6 மணியளவில் மேற்கொண்ட வான் தாக்குதலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.

பரிஸ் மண்ணில் நினைவேந்தல்
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவையடைந்த 6 வேங்கைகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நவம்பர் மாதம் பரிஸ் மண்ணில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் பரிதியின் நினைவேந்தல் நிகழ்வும் பிரான்ஸ்சில் இடம்பெற்றது.

பரிஸின் புறநகரான லாக்கூர்னேவ் நகரில் அந்த மாநகரத்தால் நிறுவப்பட்ட பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் திருவுருவச்சிலையின் முன்பாக பிரான்ஸ் ஆன்மாக்களின் நினைவு நாளான நேற்று புதன்கிழமை இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
புதியது பழையவை