மட்டக்களப்பு ஊடக அமையம் ஸ்தாபிக்கப்பட்டு, நான்கு வருடங்கள் பூர்த்தி



மட்டக்களப்பு ஊடக அமையம் ஸ்தாபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், நேற்று(02-11-2023)ஆம் திகதி  விசேட நிகழ்வுகள்
இடம்பெற்றன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றவியல் தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் இன்றாகும்.

இத்தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் மட்டு ஊடக மையத்தின் ஏற்பாட்டில் மட்டு ஊடக அமையத்தின் நான்கு ஆண்டு நிறைவு தின நிகழ்வு
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றன.

மட்டு ஊடக அமையத்தின் ஊடாக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சமூக செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது.

மட்டு ஊடக அமையத்தின் நான்கு ஆண்டு நிறைவினை சிறப்பு வகையில் ஊடகவியலாளருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை