"எஜமான்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறை காக்கிச்சட்டையை கழட்டி விட்டு வீடு செல்ல வேண்டும்"





கடந்த மாதம் நடைபெற்ற மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை அபகரிப்புக்கு எதிராக நடைபெற்ற சுழற்சி முறை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செங்கலடி பிரதேச வருகையின் போதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கால் நடை பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என 35க்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளபட்டபோது மேற்படி வழக்கிற்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான Mathiaparanan Abraham Sumanthiran  மற்றும் சட்டத்தரணிகளான கலாநிதி ஜெயசிங்கம், Perinpam Premnath, Anne Kulanayagam, மயூறி, ஜெகன் மற்றும் சபாறன் ஆகியேர் ஆஜராகி இருந்தார்.

சுமந்திரன் அவர்கள் தமது வாதத்தில் சில படங்களைக் காட்டி பண்ணையாளர்கள் வீதியை மறித்து போராட்டம் நடத்தவில்லை. அவர்கள் அமைதியாக வீதியின் ஓரத்தில் நின்று தமது எதிர்ப்பைக் காட்டினர்.

உண்மையில் வீதியை மறித்து பொலிஸாரே (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது), அரசியலமைப்பு உறுப்புரை14ன் படி அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதும் மக்களது உரிமை என்றும் ஜன கோசம் என அழைக்கப்படும் வழக்கான AMARATUNGA VS SIRIMAL AND OTHERS (JANA GHOSHA CASE) 1993 1SLR வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி Mark Fanando அவர்களது தீர்ப்பை மேற்கோள் காட்டி இப்படியான போராட்டங்கள் நடக்கும்போது பொலிஸார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறியதை சுட்டிக்காட்டியதுடன் அதே உயர்நீதிமன்ற நீதிபதி Mark Fanando அவர்கள் 10 வருடம் கடந்து இடம்பெற்ற Senasinghe V. Karunatilleke, Senior Superintendent Of Police, Nugegoda And Others, SLR-Year-2003 -Vol. 1, p 172  வழக்கில் 10 வருடம் கடந்தும் தாம் ஏற்கனவே கூறிய விடயம் நடக்கவில்லை என்பதை கூறியதை சுட்டிக்காட்டி அது நடந்து 20 வருடம் கடந்தும் பொலிசார் இதை செய்யவில்லை எஜமான்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறை காக்கிச்சட்டையை  கழட்டி விட்டு வீடு செல்ல வேண்டும் என்று கூறினார்.

பொலிஸார் சில ஆதாரங்களை கொண்டு வருவதாக கூறியதற்கு இணங்க வழக்கானததை 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதியது பழையவை