இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்புஇலங்கையர்களும் லியோனிட் விண்கல் மழையினை பார்வையிடலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.

விண்கல் மழை இந்த வார இறுதியில் தென்பட உள்ள நிலையில் நாளை(18) மற்றும் நாளை(19) மறுதினம் இலங்கையர்கள் இதனை காணலாம்.

இவ்விரு நாட்களிலும், அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு கிழக்கு அடிவானில் விண்கல் மழை தென்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒரு மணித்தியாலத்திற்கு 10-15 விண்கற்கள் வரை காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடாந்திர விண்கல் மழைக்கு (leo) சிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, லியோனிட் விண்கல் மழையிலிருந்து வரும் விண்கற்கள் வினாடிக்கு 44 மைல்கள் (வினாடிக்கு 71 கிலோமீட்டர்) வேகத்தில் பயணிக்கின்றன.

நாசாவின் கூற்று
தொலைநோக்கி மூலம் விண்கற்களை நீங்கள் பார்க்க முடியாத அளவுக்கு இது மிக வேகமாக உள்ளது.

1966 ஆம் ஆண்டு விண்கல் மழை பெய்த போது, 15 நிமிடங்கள் இதனை காணக்கூடியதாக இருந்துள்ளது.

இறுதியாக 2002 ல் விண்கல் மழை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை