மட்டக்களப்பு காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதை பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட
நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகனவின் வழிகாட்டலில், மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட
சோதனை நடவடிக்கையின் போதே பொலிஸ் உத்தியோகத்தர் கைதானார்.

இதேவேளை 72 கிராம், 10 கிராம் மற்றும் 2 கிராம் 500 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்
மேலும் மூவரும் நேற்று காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புதியது பழையவை