அரசியல் இல்லாமல் போராட்டம் இல்லை..!
விடுதலைப்போராட்டம் எல்லாமே அரசியலுடன் கலந்தவைதான் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்வது நல்லது..!
சிலரின் விமர்சனங்கள் மாவீர்களின் நினைவு வணக்கம் அரசியல் சார்ந்தவர்கள் செய்வது, பங்குபற்றுவது தவறு என வாதிடுவது அவர்களின் அறியாமையே..!
ஈழ விடுதலைப்போராட்டத்தின் அத்திவாரம் அரசியலில்தான் கருக்கொள்ளப்பட்டது தந்தை செல்வா ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால்தான் ஆரம்பிக்கப்பட்து!
தந்தை செல்வாதான் 1976,மே,14,ல் தமிழர் விடுதலை கூட்டணியை உருவாக்கி வட்டுக்கோட்டை தீர்மானமாக சுதந்திர தமிழீழம் ஒன்றே தீர்வு என பிரகடனப்படுத்தினார்! அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான அங்கிகாகாரமும் அரசியலால்தான் 1977, ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வடகிழக்கில் 18, தொகுதியில் மக்களின் ஆணை பெறப்பட்து!
அந்த ஆணை இன்றும் உள்ளது…!
வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடையவே 36, விடுதலை இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் இணைந்தன அதுவும் அரசியல்தான்..!
பின்னர் 1989, ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின்னர் 35, இயக்கங்களும் மௌனித்து ஒரேயொரு விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலை புலிகள் மட்டும் 2009, மே,18 வரையும் போராடினர், மரபுப்படையணியா திகழ்ந்தனர் அவர்களும் இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்கள்,ஒப்பற்ற தியாகங்களை செய்தனர், திம்பு தொடக்கம் ஜெனிவாவரை இலங்கை அரசின் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுக்களில் ஈடுபட்டனர் அது அரசியல் இல்லாமல் வேறென்ன..? அதுவும் அரசியல் தான்.!
எனவே அகிம்சைபோராட்டமானாலும், ஆயுதப்போராட்டமானாலும் அரசியலால்தான் நகர்த்தப்பட்டது.!
இப்போதும் நகர்த்தப்படுகிறது !
வரலாற்றை மீட்டுப்பார்பது அனைவரின் கடமையும், உரிமையும்!
தற்போது இராஜதந்திர ரீதியான செயல்பாடுகளும் ஜநா தொடக்கம் சர்வதேச நாட்டு அரசியல் தலைவர்களுடன் தமிழ்தேசிய அரசியல் தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் முன் எடுக்கும் எமது உரிமைக்கான செயல்பாடுகள் எல்லாமே அரசியல்தானே..?இதனை சிந்தித்து விளங்கிக்கொள்வது நல்லது.!
கொள்கையில் உறுதி வேண்டும் என்றால் மாவீரர்கள் என்ன கொள்கைக்காக போராடினார்கள், கொள்கை என்றால் என்ன?
தமிழீழம் என்ற தனியரசு பெறுவதே அவர்களுடைய கொள்கை அல்லவா..?
தனியரசு என்பது (தனி+அரசு=தனிய்யரசு இதில் அரசு என்பது அரசியல் கலந்தது) அரசியல் இல்லாமல் எப்படி இது சாத்தியம் !
இந்த சின்ன விடயம் கூட தெரியாமல் பலர் எம்மத்தியல் கொள்கை பற்றி கதைப்பதும், அரசியல் பற்றி கதைப்பதும் உண்டு.!
எனவே மாவீரர்கள் மண்ணுக்காக போராடி மண்ணில் விதை உண்ட மகாத்தானவர்களின் நினைவுகளை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள், அது சார்ந்தவர்கள் நடத்துவதில் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை!
அரசியல் இன்றி போராட்ங்கள் இல்லை!
அரசியல் இன்றி தீர்வுகள் இல்லை!
அரசியல் இன்றி விடுதலை இல்லை!
-பா.அரியநேத்திரன்-
20/11/2023