கறுப்பு கொடி கட்டப்பட்டு கிழக்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம்அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் குறித்து அப்பிரதேசமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமையைக் கண்டித்து நேற்று(19.11.2023) அப்பகுதி குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு
குறிப்பாக வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கப்படாமல் இருக்கின்ற நிலையில் அந்த வைத்தியசாலையின் கட்டடம் இன்று திறக்கப்படவுள்ளதை எதிர்த்தும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பிழையான முடிவையும் எதிர்த்துமே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டும் பதாகைகள் கட்டியும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை