Sun TV யில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்த மட்டக்களப்பு மகிழடித்தீவை சேர்ந்த இளைஞன் நிலு இந்தியா சின்னத்திரையில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக தமது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
இன்நிலையில் நிலு அன்மையில் இலங்கை வந்தபோது தமது கிராம மக்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
படுவான் மண்ணில் பிறந்த நிலு என்றால் நிச்சயம் பல சவால்களை எதிர்கொண்டுதான் தனது திறமையை வெளிக்காட்டியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
படுவான் மண்ணில் பிறந்த நிலு மற்றைய படுவான் மண் இளைஞர், யுவதிகளுக்கும் ஏனையோருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
படித்து தமது திறமையை வெளிக்காட்டுவது போன்றன்று இத்திறமை, மாறாக தம்முள்ளே மறைந்திருக்கும் திறனை இனம் கண்டு வெளிக்காட்டுவதாகும்.
ஒவ்வொருவரும் தம்முள் ஒழிந்திருக்கும் ஆற்றலை இனம் கண்டு பிடித்து , அதனை வளர்த்தெடுப்பதுடன் தமக்கு ஏற்படும் சோதனைகள், வேதனைகள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி சாதனையாளர்களாக மாற வேண்டும்.
அந்தவகையில் சின்னத்திரை நடிகர் நிலு அவர்கள் தமது துறையில் பல சாதனைகள் புரிந்து , எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் உருவாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
உனது வளர்ச்சி பாதையில் எல்லோரும் உன்னை வாழ்த்துவார்கள். ஆனால் உனது உச்சக்கட்ட. வளர்ச்சி காலப்பகுதியில் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த நேரம் நீயே உன் மார்பை தட்டி சொல் என்னால் முடியும் என்று தனக்கு தானே சொல்லிக்கொள். வெற்றி உனதாகும்.
எமது படுவான் மண்ணில் பிறந்தவர்கள் பலர் தமது திறன்களை பல சவால்கள் மத்தியில் வளர்த்து இறுதியில் ஜெயிக்க முடியாமல் பாதியிலே கைவிட்டு விடுகின்றனர்.
தட்டிக்கொடுக்க யாரும் இல்லை என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம் ஏனென்றால் அச்செயல்தான் எம்மை தட்டிக்கொடுத்து வெற்றிபெற வைக்கும் வாய்ப்பாகும்.
உங்கள் சாதனைக்கு படுவான் மண்ணை சேர்ந்த எங்களதும், மற்றும் எமது உளசமூக ஆதரவு நிழல் அமைப்பினதும் வாழ்த்துக்கள் .