சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று(04-11-2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்,மட்டு.ஊடக அமையம் என்பனவற்றின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா தலைமையில் இந்த நூல்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அறிமுகவுரையினை முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் அவர்களும் நூல் நயவுரையினை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் வழக்கியதுடன் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஊடகத்துறை விரிவுரையாளருமான அ.நிக்ஸன்., சிறப்புரையாற்றினார்.
இதன்போது முதல் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நூலாசிரியரினால் நூல் வழங்கப்பட்டதுடன் நூலாசிரியர் இரா.துரைரெட்னம் இதன்போது ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் நூலாசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெட்னத்தின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.