இலஞ்சம் பெற்றவேளை கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகொழும்பு வடக்கு (காதி) நீதிமன்ற நீதிபதி ஒருவர் அலுவலகத்தில் ஒருவரிடமிருந்து 7500 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவாகரத்து சான்றிதழ் வழங்க இலஞ்சம்

சட்டரீதியாக திருமணம் செய்து கொண்ட இரண்டாவது மனைவியைப் பிரிந்து செல்வதற்கு காதி நீதிமன்ற நீதிபதி விவாகரத்துச் சான்றிதழை வழங்க முறைப்பாட்டாளரிடம் 7500 ரூபாவைக் கேட்டதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளும் போது, ​​தெமட்டகொடையில் உள்ள கொழும்பு வடக்கு (காதி) அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை