மட்டு - போரதீவுப்பற்று பிரதேசசபையினால் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சிரேஸ்ட பிரஜைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும்!



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன்  தலைமையில்  (18-11-2023)ஆம் திகதி இடம் பெற்றனர்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலகத்தினால் நாடாத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றனர்.





விசேட அதிதிகளாக

போரதீவுப்பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த சிரேஸ்ட பிரஜைகளான 

1:-திருமதி.சிவபாதம் இராசம்மா(வெல்லாவெளி
2:-திருமதி.வல்லிபுரம் இராசலெட்சுமி(சங்கபுரம் 13)
3:-திருமதி.ஆசீர்வாதம் சரஸ்வதி(பாலையடிவட்டை)
4:-திருமதி.விஜயலெட்சுமி யோகேஸ்வரநாதன்(மண்டூர்)
5:-திரு.கணபதிப்பிள்ளை தணிகாசலம்(பழுகாமம்)
6:-திரு.சபாரெட்ணம் விக்ரர்செல்வரெட்ணம்(தம்பலவத்தை)
7:-திரு.இளையதம்பி வேல்முருகு(திக்கோடை) ஆகிய சிரேஸ்ட பிரஜைகளை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.





அதிதிகளாக

திருமதி.கோ.இளங்கீரன்(சனசமுக அ.உத்தியோகஸ்தர்)
திரு.மு.கருணாநிதி(சனசமுக அ.உத்தியோகஸ்தர்) கலந்துகொண்டனர்.



நிகழ்வின் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் நூலக உதவியாலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களினால் கலை நிகழ்ச்சிகளும் நூலக வாசிப்பு மாத போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





புதியது பழையவை