மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் பேரெழுச்சியுடன் மாவீரர்களுக்கு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!


மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலுமில்லத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பொலிஸார் தீபங்கள் ஏற்றி மாவீரர்களை பொதுமக்கள் நினைவுகூர கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.


மாவீரர்களை நினைவு கூருவதற்காக துயிலுமில்லத்திற்குள் ஒன்றுக்கூடியிருந்த மதத்தலைவர்கள்,மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களினால் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகைச்சுடர் ஏற்றிய நிலையில், பெருந்திரளானோர் அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.


இதன்போது பொலிஸாரின் பல தடைகளையும் மீறி கொட்டும் மழையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை