நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய ராஜபக்ஸ சகோதரர்கள்- உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்புமுன்னாள் ஜனாதிபதி மகிந்த, கோட்டா, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ஆகியோர் பிழையான முகாமைத்துவத்தை செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று(14-11-2023) தீர்ப்பு வழங்கியுள்ளது.

2019 - 2022 காலப்பகுதியில் இடம்பெற்ற
இவர்களின் பிழையான முகாமைத்துவம்
மூலம் நாடு வங்குரோத்தானதாக பிரதம
நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்
ஐவரடங்கியநீதியரசர்கள் தமது தீர்ப்பில் 
சுட்டிக்காட்டி உள்ளனர். 

இவர்களில் ஒரு
நீதியரசர் மாறுபட்டு கருத்து தெரிவித்து
உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்
பி.பி.ஜயசுந்தர, முன்னாள் நிதியமைச்சு
செயலாளர் ஆட்டிகல,  முன்னாள் மத்திய வங்கி ஆளுனர்களான அஜிட் கப்ரால்,
,லக்ஸ்மன் ஆகியோரும் மேற்குறிப்பிட்டவர்
களின் பிழையான முகாமைத்துவத்திற்கு
 துணை போயுள்ளதாகவும்உயர்நீதிமன்றம் 
தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை