நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய - செல்வராசா கஜேந்திரன் எம்.பிநாடாளுமன்றில் தனது உரையை ஆரம்பிக்கும் போது தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தனது உரையை ஆரம்பிக்கும் போதே அவர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் தனது உரையை தொடர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த வரவு செலவு திட்டம் கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மூன்றாவது நாளாகவும் தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள்!
மூன்றாவது நாளாகவும் தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள்!

மக்களின் வாழ்கை சுமை
மேலும் அவர் கூறுகையில், “கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய ஏற்றுமதித்துறை 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அதற்கு மாறாக நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

கடன் வாங்கும் அளவு குறைந்திருக்க வேண்டும் ஆனால் தற்பொழுது கடன் வாங்கும் எல்லை அதிகரித்துள்ளதுடன் வரி விதிப்பின் அதிகரிப்பினால் மக்களின் வாழ்கைச் சுமை அதிகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
புதியது பழையவை