மோட்டார் சைக்கிள் பஸ் வண்டி மோதி விபத்து - ஒருவர் ஸ்தலத்திலேயே உ..யிரிழப்பு!அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று (2023.11.17) மாலை 5.45 மணியளவில் அக்கரைப்பற்று டிப்போவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்திடத்துடன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை