பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ தேசிய கொடிதமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள Tower of London என்ற கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் சுமார் 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல இடமும், பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கிரீடம் மற்றும் அணிகலன்களின் (crown jewels) காப்பிடமும் ஆகும்.

உலக பிரசித்தி பெற்ற Tower Bridgeல் செல்லும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய மக்களும், உல்லாசப் பயணிகளும் பல மணிநேரம் நடந்த இம்மாவீரர் வணக்கத்தைப் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயகத்தில் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, இன்றும் அவற்றின் எச்சங்கள் கூட இலங்கை அரசால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் லண்டன் மாநகரத்தில் இவ்வணக்கம் எந்தவித தடையும் இன்றி உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
புதியது பழையவை