கிழக்கு மாகாண அதிபர் சேவை - lll நியமனம் வழங்கி வைப்பு!



அதிபர் சேவை - lll பரீட்சையில் சித்தியடைந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 499 பேருக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (06 -11-2023) திருகோணமலை ஹிந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, எஸ்.எம்.எம்.முஷாரப், .பி.ஏ.கபில அத்துகோரல, டி.வீரசிங்க, அலிசாஹிர் மெளலானா, மாகாண சபையின் தவிசாளர் ஏ.பி.ஜி.சந்திரதாஸ கலபதி ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாக்க விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதியது பழையவை