14 வயது சிறுவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிர் - இரா.சாணக்கியன் ஆவேசம்!அம்பாறை மாவட்டம் கொக்குவில் பிரதேசத்தில் ஆலயம் ஒன்றிலிருந்து பூஜை உபகரணங்களை திருடிய குற்றாச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் (வயது-14) பொலிஸாரினால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (04.12.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த சிறுவன் செய்த இந்த சிறிய குற்றச்சாட்டுக்காக இன்று அவரின் உயிரே பறிபோயுள்ளது.

இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதனை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை