இவ்வருடத்தில் 16 வயதுக்குட்பட்ட 2000 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் அறிக்கையின்படி கடந்த நவம்பரில் 16 வயதுக்குட்பட்ட 10 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
16 வயதுக்குட்பட்ட பெண்கள் தாயாக மாறுவது சமூக மற்றும் சட்டப் பிரச்சனையாக மாறியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.