2024 புதுவருடத்தை கொண்டாடாத நாடுகள்!



உலகின் பல நாடுகள் நளைய தினம் புது வருடத்தை கொண்டாட ஆயத்தமாகி இருந்தாலும், சில நாடுகள் தங்கள் புது வருட பிறப்பு கொண்டாட்டத்தை மற்றுமொரு நாளில் கொண்டாடி வருகின்றன.

வேவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றுவதன் காரணமாக, குறித்த நாடுகள் இவ்வாறாக வேறு நாட்களில் புது வருட கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்றன.

வேவ்வேறு தினங்களில் உலக நாடுகளில் புது வருட கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, அந்தத்த நாடுகளின் கலாச்சாரங்கள், தனித்துவமான சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நேரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இதனடிப்படையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஜனவரி முதலாம் திகதி புதுவருடத்தை கொண்டாடுவதில்லை.


சீனாவின் வசந்தகால விழா
சந்திர நாட்காட்டிக்கமைய சீனா ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு இடையில் தனது புது வருடத்தை கொண்டாடுகிறது.


வசந்தகால விழா என அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு என்பது குடும்ப சந்திப்புகள், பண்டிகை அணிவகுப்புகள், டிராகன் மற்றும் சிங்க நடனங்கள் இடம்பெறும் காலப்பகுதியாகும்.

சீன குடும்பங்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் புத்தாண்டு தினத்தன்று ஒன்றுகூடல் இரவு விருந்து நடைபெறுவது இதன் சிறப்பம்சமாகும்.


இஸ்லாமிய புத்தாண்டு
இஸ்லாமிய நாட்காட்டியைப் பின்பற்றும் நாடுகளில், புத்தாண்டு, ஹிஜ்ரி அல்லது இஸ்லாமிய புத்தாண்டு என அழைக்கப்படுகிறது.



இது சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதன் காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் வேவ்வேறு தினங்களில் புது வருட கொண்டாட்டங்கள் கொண்டாடப்படும்.

அத்துடன், இஸ்லாமியர்களின் புத்தாண்டு முஹம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவிற்கு குடிபெயர்ந்ததைக் குறிப்பிடுகிறது.

யூதர்களின் புத்தாண்டு
யூதர்களின் புத்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.




ரோஷ் ஹஷானா எனப்படும் யூதர்களின் இந்த புத்தாண்டு, உயர் புனித நாட்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இதன் போது, தேனில் தோய்த்த ஆப்பிள்கள் போன்ற உணவு வகைகளுடன் குடும்பங்கள் ஒன்று கூடி புது வருடத்தை வரவேற்கின்றன.

தாய்லாந்து
தாய்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.




சோங்க்ரான் என பெயரிடப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் தண்ணீர் சண்டைகளில் ஈடுபடுவார்கள்.

தண்ணீர் விழாக்கள் மாத்திரமின்றி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுதல், கலாச்சார மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் சோங்க்ரான் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளடக்கியுள்ளது.
புதியது பழையவை