நாடாளுமன்றத்திற்கு மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற வளாகத்தின் மின் கட்டணம் ஒரு கோடியே 28 லட்சத்து 52 ஆயிரம் ரூபாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான ஆறு மாதங்களுக்கான மொத்த மின்சாரக் கட்டணம் 24 லட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின் இணைப்புகளுக்கு மேலதிகமாக, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் தொகுதிக்கு 120 மின் இணைப்புகளும் ஜயவடனகம அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளுக்கு 15 மின் இணைப்புகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மாதிவெல குடியிருப்பில் தற்போது 109 உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் தொடர்பான மின்கட்டணம் நாடாளுமன்றத்தால் செலுத்தப்பட்டு, பின்னர் உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் நாடாளுமன்றம் கூறுகிறது.
மதிவேல உறுப்பினர்கள் குடியிருப்புகள் தொடர்பாக கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கான மின் கட்டணம் 46 இலட்சம் ரூபாவாகும்.