"நான் நேர்மையானவன்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தின் ஆறாவது நிகழ்வு (22-12-2023)ஆம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிநெறியில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விளக்கம் மற்றும் சட்ட ஏற்பாடுகள், அவற்றினால் ஏற்படும் பாதக விளைவுகள் என்பன தொடர்பாக வளவாளர்களான பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன் அவர்களினால் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சம்பவ கற்கைகள் மூலமும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.