கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடிக்கு இன்று(16-12-2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் இவ்வாறு மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை செய்கைகள்
இதனால் 800 கன அளவு நீர் வெளியேறி வருவதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.


இவ்வாறு வான் கதவுகள் திறந்துள்ளமையால் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளாண்மை செய்கைகள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை