ஆண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரிப்பு!



இலங்கையில் சுமார் 10 சதவீத ஆண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் தேசிய வேலைத்திட்ட முகாமையாளர் வைத்தியர் நேதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்

“இந்த வன்முறைகளில் உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை அடங்கும்.



இந்நிலையில், குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் 'மிதுரு பியச' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து, குடும்ப வன்முறை வழக்குகளைப் புகாரளிக்க 070 2 611 111 என்ற எண்ணைப் பயன்படுத்த முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை