மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட கொம்பன் யானை நேற்றய தினம் (29-12-2023)உயிருக்கு போராடிய நிலையில் இன்று (30-12-2023)காலை உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு கிண்ணையடி முருக்கன்தீவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானையின் உடல்நலக்குறைவு காரணமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தும் உரியது நேரத்துக்கு வருகை தராதா காரணத்தால் கணேஸ் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.