இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்ட மாகாணம்
இலங்கையில் நேற்று வரை, 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில் 3,704 பேர்,இந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.
மேலும் 46.4 வீதமான தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக பார்க்கப்படுகிறது.