இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை அதிகமாக இருப்பதால் விரைவாக அவை விற்பனை நிலையங்களில் தீர்ந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சதொச ஊடக 35 ரூபாவிற்கு முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
புதியது பழையவை