மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இளஞ்செழியன்2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (18-12-2023) கொழும்பில் இடம்பெற்றது.

பதவியை வகிக்கும் முதலாவது தமிழர்
இந்த கூட்டத்தின்போதே நீதிபதி இளஞ்செழியன் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


தற்சமயம் இரண்டாவது தடவையாக 2024 ஆம் ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உபதலைவராக எஸ்.எச்.எம்.என்.லக்மாலி (S.H.M.N.Lakmali), செயலாளராக எச்.ஏ.டி.என். ஹேவாவாசம் (H.A.D.N. Hewawasam), பொருளாளராக கே.ஏ.டி.கே.ஜெயதிலக்க (K.A.T.K.Jayathilake) மற்றும் உப செயலாளராக டபிள்யூ.டி.விமலசிறி (W.D.Wimalasiri) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை