காட்டு யானைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கால்நடை உரிமையாளர் ஒருவரின் சடலம் மங்களகம கெவிலியமடு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மங்களகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பாண்டிரிப்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா லிங்கராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்நடைகளுக்கு உணவளிக்க
இறந்தவர் மாட்டுத் தொழுவ உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.
தனது கால்நடைகளுக்கு உணவளிக்க காட்டில் கால்நடை கொட்டகை அமைத்து அவரும் அங்கு தங்கியதாக கூறப்படுகிறது.