பௌத்த பிக்குகளை நான் மதிக்கின்றேன்! ஆனால் அனுமதிக்க மாட்டேன் - கிழக்கு ஆளுநர் அதிரடிநான் வழமையாக பௌத்த மதகுருக்களை மதிக்கின்றேன். அனைவரையுமே மதிக்கின்றேன். ஆனால் அதற்காக அவர்கள் விடுக்கும் பொறுத்தமற்ற விடயங்களுக்கான கோரிக்கைகளுக்கு ஆளுநர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்க முடியாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் இன்மையையே முதலாவதாக நான் அவதானித்துள்ளேன் என்றும் கூறினார்.

இதுவே பத்து வருடங்களுக்கு முன்னர் இப்போது கிடைத்துள்ள பதவி எனக்கு கிடைத்திருந்தால் நிச்சயமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதியது பழையவை