தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியானது பொலன்னறுவையில் நேற்று(28-12-2023) இடம்பெற்றிருந்தது.
பளுதூக்கல் போட்டி
குறித்த போட்டியில் 87kg எடை பிரிவில் ஜதுசா 103kg எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளதுடன் 71kg எடை பிரிவில் சிறீ வித்தகி 88kg தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.