மிகலேவ, மகாவலி தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் கண்டெடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரியவர்களிடம் கையளித்து பாடசாலைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மிகலேவ மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் தமது செயலால் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் வசிக்கும் மாணவிகள்
இந்தச் செயலை மிகலேவ தம்மிதா கிராமத்தைச் சேர்ந்த என். பி. திசூரி யுவனிகா மற்றும் ஏ. டபிள்யூ. ஜி. சந்துனி இமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவிகள் செய்துள்ளனர்.
பாடசாலைக்கு புகழை
கற்றலில் சிறந்து விளங்கும் இந்த இரண்டு மாணவிகளும் கடும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என மெகலேவ மகாவலி தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ. பி.எம்.லிலானி மங்கலிகா வீரசேகர தெரிவித்தார்.
இந்த இரண்டு மாணவிகளும் எங்கள் பாடசாலைக்கு புகழை தேடிக் கொடுத்துள்ளனர். இவ்விரு மாணவிகளுக்கும் பாடசாலையின் ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் தலை வணங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.