நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (23-12-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பிற்காக 7500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்தன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மதுபானக் கடைகளை திறக்க முடியும் எனவும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.