மட்டக்களப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை - தாழ்நிலங்கள் வெள்ளத்தில்மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சில பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன தினைக்கள பொறியலாளர் கிசோக்காந்தின் ஆலோசனைக்கு அமைவாக நவகிரிக்குளத்தின் ஒரு வான் கதவு, 1 அடி திறந்து
விடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு – வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இவ்வீதியின் ஊடாக போக்குவரத்துச் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நவகிரிககுளத்தின் வடிச்சல், வாய்க்கால்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிரான்,புலிபாய்ந்தகல் பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதன் காரணமாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்
இயந்திரப்படகு சேவைகள் மூலம், மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை