மட்டக்களப்பில் மூடப்பட்ட தபால் அலுவலகங்கள்தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக மட்டக்களப்பில் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.

இதேவேளை நாளைய தினமும்  தபாலகங்கள் மூடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை