நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று திருத்தப்பட்டதன் பின்னர் இன்று மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் நேற்று பிற்பகல் செயலிழந்த நிலையில் காணப்பட்டமையால் அவற்றை பழுது நீக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மின்சாரத் தடை காரணமாக மற்றைய மின் உற்பத்தி இயந்திரமும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பழுது நீக்கும் பணிக்கு பின், செயலிழந்த நிலையில் இருந்த மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று, இன்று இயக்கப்பட்டு, மின் இணைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

நீர் மின் உற்பத்தி தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதால் தேசிய மின்சார விநியோகத்திற்கு இந்த நிலைமை தடையாக இருக்காது என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை