ஜனாதிபதி தேர்தல் குறித்து இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிவிப்பு!



ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது?

அல்லது தமிழ் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்குவதா?

அல்லது ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதா? 

என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

அது தொடர்பில் நாம் இன்னமும் யோசிக்கவும் இல்லை என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியே தமிழரசுக் கட்சி.


ஒரு சில தமிழ் கட்சிகள் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பது போல் நாம்
தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது.

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலோ, அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப் படமாட்டோம்.
முதலில் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்பு வரட்டும்.
அதன்பின்னர் அது பற்றி யோசிப்போம் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை