விலைமதிப்பற்ற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுப்பு!அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் இருந்து 22 கிலோகிராம் நிறை கொண்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளே நீர் குமிழிகள் இருப்பதால் குறித்த இரத்தினக்கல் சிறப்பு வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த இரத்தினக்கல்லின் உரிமையாளர் அதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாகவும்,

சர்வதேச சந்தையில் அதனை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை