நடிகர் விஜயகாந்த் மரணம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல்!



உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன் என கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பலமுறை ஏற்பட்ட சந்திப்பின்போது, அவருடைய எண்ணங்களிலும் செயல்களினூடாகவும்  அவர் ஒரு போற்றப்பட வேண்டிய தலைவர் என்பதை அறிந்தேன்.
 
எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவன். 

மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர், இலங்கையிலுள்ள பாமர மக்களுக்காக விளம்பரமற்ற பல உதவிகளைச் செய்துள்ளார். இவர் பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.

நடிகர் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்".
புதியது பழையவை