கொழும்பில் - ஆமர்வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆமர்வீதியில் - கிறீன் லைன் பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் கிறீன் லைன் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் வர்த்தக நிலையம், மற்றும் இரசாயன வர்த்தக நிலையங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் தீவிபத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அங்கிருக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.