எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!உலக வாழ் மக்களுக்கு, உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும்.


சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும். சர்வதேச எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாள் எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கருவானது முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற, எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.

அதன் பின்னர் அரசாங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

வைத்தியசாலைகளில் குருதிமாற்று, தடுப்பூசி செலுத்தல் போன்ற சுகாதார முறைகேடுகளின் மூலம் எயிட்ஸ் பரவும் வீதம் இலங்கையில் குறைவு எனவும், உடலுறவு மூலமே எயிட்ஸ் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

எயிட்ஸ் தொற்றுப் பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை