மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட திருமதி ஜே.ஜே.முரளிதரன், தனது கடமைகளை இன்றைய தினம்(18-12-2023) சம்பிரதாய பூர்வமாகப்
பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று (18)காலை மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு, மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந்த தலைமையில், மாவட்டச் செயலக
உத்தியோகத்தர்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன், அரச உயர் அதிகாரிகள்,
ஊடகவியலாளர்கள் என பலரும் புதிய அரச அதிபருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய திருமதி ஜே.ஜே.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா
ஓய்வு பெற்ற பின்னர், அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தைப் பெற்றவராகவும், திருமதி ஜே.ஜே.முரளிதரன் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை