பாடசாலை மாணவர்களுக்கு - போதைப்பொருள் விற்க முயன்றவர் கைது!யாழ். நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (11-12-2023) கைதுசெய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டபோது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை