களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று(26-12-2023)அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் அறியத்தருகையில்,
46 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையில் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (24) நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.