அரச நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியாகும் – மனித உரிமைகள் ஆணைக்குழு



அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பொலிஸ், சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை நிலையங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகு எப்படி செயல்பட வேண்டும், மனநலம் குன்றியவரை அனுமதிக்கும் போது அவருக்கு அளிக்கப்படும் பராமரிப்பு மற்றும் சிகிச்சை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிசெம்பர் 10ஆம் திகதியன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படும் நிலையில் டிசம்பர் 11ஆம் திகதி இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
புதியது பழையவை