இளையவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் "வலியோடு போராடு" பாடல்நம்மவர் படைப்புகள் பல வரவேற்பை பெற்று வரும் காலத்தில் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியில் "வலியோடு போராடு" எனும் தன்னம்பிக்கை தரும் காணொளி பாடல் ஒன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது. 


பல குறுந்திரைப்படங்கள் மற்றும் முழுநீள திரைப்படங்களை இயக்கியுள்ள கோடீஸ்வரன் அவர்களின் இயக்கத்தில் டினேஸ்குமாரின் இசை மற்றும் குரலில் மலையக மண்ணின் பாடலாசிரியர் ராம்கியின் வரிகள் மற்றும் ஹனுஸ்யனின் சொல்லிசையில் ஹேசாந்தின் இசைக்கலவையில் உருவாகியுள்ள இந்த பாடலில் பிராசாந், இம்ரான், ஹேந்திரன், அட்சயா, கிலசன், ருத்ரா, பிரபாகரன், சுலோ, ஜனு, மகாதேவன், அகிலன், டிவானு, கபில், டிஷா, சிறிதர், ரிஷி, சனோ, ஜெயசந்திரன், நிலு என பல கலைஞர் பட்டாளங்கள்   இணைந்து பங்கெடுத்துள்ளனர். 

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கைகோர்த்துள்ள கலைஞர்களின் படைப்பை கொண்டாடி வரும் ரசிகர்கள் இந்த காணொளி பாடலினூடாக இளையவர்களை தட்டிக்கொடுத்து நல்ல முயற்சியாளர்களாக உருவாக்க களமாக அமைந்துள்ளதாக  கருத்து கூறி வருகின்றனர். 

இந்த பாடலை DTS Creations எனும் வலையொளி பக்கத்தினூடாக பார்த்து மகிழலாம்புதியது பழையவை