அம்பாறையில் கரடி தாக்குதலுக்குள்ளாகி - இருவர் வைத்தியசாலையில்அம்பாறை திருக்கோவிலில் தந்தையும் மகனும் விறகு எடுப்பதற்காக சென்ற வேளை இருவரும் இன்று கரடி தாக்குதலுக்கு இலக்காகினர்.

தலை, கழுத்து, கால் மற்றும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான தந்தையும், 26 வயது மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இருவரும் பிரதேச வாசிகளின் உதவியுடன், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கரடி தாக்குதலுக்குள்ளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை