நாடளாவிய ரீதியில் வனஜீவராசிகள் அதிகாரிகள் வேலை நிறுத்தம்!நாடளாவிய ரீதியில் வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (18-12-2023) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.

வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை