அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!
கிறிஸ்மஸ் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் மூடப்படும்.

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்திற்கொண்டு, அவர்களின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நட்சத்திர தர ஹோட்டல்களில் செல்லுபடியாகும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் மூலம் மதுபான சாலைகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எனினும் , செல்லுபடியாகும் மதுபான உரிமங்களைக் கொண்ட SLTDA- அங்கீகரித்த நிறுவனங்கள் உட்பட அனைத்து மதுபானக் கடைகளும் போயா தினத்தன்று (செவ்வாய்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிகபப்ட்டுள்ளது.
புதியது பழையவை